Qatar Tamil News

கத்தாரின் இரண்டாவது Drive-Through கொரோனா தடுப்பூசிகள் மையம் வக்ரவில் திறந்து வைக்கப்பட்டது

மார்ச் மாதம் 02ம் திகதி  லுசைல் பகுதியில் கத்தாரின் முதல் Drive-Through மையம் திறந்து வைக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ளமையானல், கத்தாரின் சுகாதார அமைச்சு இரண்டாவது Drive-Through மையத்தை இன்று வக்ராவில் திறந்துள்ளது. வக்ராவில் அமைந்துள்ள அல் ஜனூப் விளையாட்டரங்கின் பின்னால் இது அமைந்துள்ளதாகவும், தினமும், காலை 11 முதல் இரவு 10 வரை மக்கள் சேவைக்காக திறந்திருக்கும் என்பதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கொரோனா பரவ ஆரம்பித்தது முதல், பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், இலகுபடுத்தவும்,  Drive-Through PCR மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதே போன்று தான் எமது மக்களை கொரோனாவிலிருந்து காக்க  Drive-Through முறையில் தடுப்பூசிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதாக Dr. Hanan Mohamed Al Kuwari அவர்கள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
 Drive-Through என்பது ஒருவரின் காரை விட்டு வெளியேறாமல் அவருக்கு சேவையை அல்லது பிச வசதியை வழங்குதல் என்பது பொருளாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button
%d